வணக்கம்.

என்தமிழ் வலை எல்லோரும் எளிதில் ஒரு இணையதளம் அமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு தளம் ஆகும். உதாரணமாக ஜூம்லாவில்.என்தமிழ்.வலை தளத்தை பார்க்கவும். இதுபோன்ற ஒரு தமிழ் தளம் நீங்களும் அமைத்துக்கொள்ளலாம்.

ஒரு இணையதளம் அமைப்பது எப்படி? தமிழில் இணையதளம் அமைக்க என்ன செய்யவேண்டும்? "தள உள்ளடக்கம்" நிர்வாகம் எப்படி சுலபமாக செய்வது? ஏன் ஒருங்குறியில் ஒரு தளம் அமைக்க வேண்டும்? இணையதளம் அமைக்க வேண்டிய மென்பொருள் மற்றும் வன்பொருள் என்னென்ன? எனக்கென்று பிரத்யேகமாக ஒரு தளப்பெயர் பதிவு செய்வது எப்படி? இலவச மென்பொருள்களை கொண்டு இணையதளம் அமைப்பதில் உள்ள நன்மைகள் மற்றும் அசௌகரியங்கள் என்ன? இலவச வலைப்பதிவு தளங்கள் இருக்கும்போது சொந்தமான இணையதளம் எதற்காக? இலவச இணையதளம் கிடைக்கும்போது எனக்கென்று ஒரு சொந்தமான தளம் எதற்கு? ஒரு இணையதளம் வடிவமைக்க வேண்டிய திறமைகள், ஆற்றல்கள் என்னென்ன? தமிழில் தட்டச்சிட நல்ல மென்பொருள் எது? வேறு மொழியில் உள்ள ஒரு தளத்தை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யமுடியுமா? கூகுளின் பல இலவச மென்பொருள்களை தமிழில் உபயோகிப்பது எப்படி? திறமூலம் மென்பொருள் என்றால் என்ன? எந்த திறமைகளை வளர்த்துக்கொண்டால் இணையதளம் மூலம் சம்பாதிக்க முடியும்? ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ், எக்ஸ்எம்எல், ஜாவாஸ்க்ரிப்ட் என்று ஏதேதோ சொல்கிறார்களே - கொஞ்சம் விளக்க முடியுமா? ஸ்டேடிக் மற்றும் டைனமிக் பக்கங்கள் என்றால் என்ன? பொதுவாக இணையதளம் மூலம் தொழில் தொடங்க என்ன செய்யவேண்டும்? இதுபோன்ற.... பல்வேறு கேள்விகளுக்கு இத்தளத்தில் விடையுள்ளது! தற்போதைக்கு என் ப்ளாக் தளத்தில் வலைப்பதிவு செய்துள்ளேன். இந்த தளத்தில் இது பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் புத்தகங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

ஏதாவது புதிய கேள்விகள் இருந்தால், நீங்கள் உங்கள் கேள்விகளை இத்தளத்தில் கேட்கலாம். தகுந்த நிபுணர்கள் தக்க பதில் அளிப்பார்கள். ஒருவேளை நீங்கள் இணையத்தில் உலாவியபோது ஒரு நல்ல தளத்தை அல்லது ஒரு நல்ல தரமான கட்டுரையை பார்க்க நேர்ந்தால், அதையும் இத்தளத்தில் பதிக்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அந்த இணையதொடரை எங்களுக்கு சமர்பிப்பது ஒன்றுதான். நாங்கள் அதை தரப்படுத்தி, பகுதிகளாக பிரித்து, பிரசுரிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

எங்கள் "இணைய வழங்கி" சேவைகளில் உள்ள நன்மைகள், மற்றும் உங்களுக்கு நாங்கள் வழங்கும் சலுகைகள் இவற்றைப்பற்றி மேலும் விபரமாக இத்தளத்தில் அறியலாம். எங்கள் சேவையை இலவசமாக பெறுவது பற்றிய விபரமும் உள்ளே உள்ளது. பல இலவச மென்பொருள்கள், விளக்கங்கள், பலதரப்பட்ட துறைகள் சம்பந்தமான இலவச புத்தகங்கள் என உங்களுக்கு தேவையான அத்தியாவசிய கணணி கருவிகள் என்று பல்வேறு அம்சங்கள் இத்தளத்தில் உள்ளன. (இதற்கு தளப்பதிவு செய்திருக்கவேண்டும்)

இப்பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள, இந்த தளம் பற்றிய வரைமுறைகள், உங்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமங்கள் மேலும், எங்களின் அந்தரங்க கொள்கைகளையும் படித்து அறிந்து கொள்ளவும்.

மேலும் அறிய "நுழைவாயில்" பொத்தானை சொடக்குக.

நுழைவாயில்

எங்கள் ஆதரவு

an image

எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். எங்களிடம் உருவாக்கப்பட்ட தளம் மற்றும் உங்களுக்கு வேண்டிய தொழில்நுட்ப சம்பந்தமான எல்லாவிதமான ஆதரவையும் எங்கள் வாடிக்கையாளர்கள் சந்தேகமின்றி பெறுவார்கள்.

தமிழில் ஒரு இணையதளம் அமைக்க முன்வாருங்கள்!

இலக்கு வாசகம்

an image

இன்னும் பத்து வருடங்களில் எல்லாவிதமான விஷயங்களை இணையதளத்தில் தேடும்போது, அதை நீங்கள் தமிழிலேயே பெறவேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தமிழ் இணையதளத்தை குறைந்த செலவில் நிர்மாணிக்க நாங்கள் முன் உதாரணமாக நின்று உதவ வேண்டும்.

நோக்க வாசகம்

an image

அதிகமானோர் கணணியில் தங்கள் பதிவுகளை பதிப்பிக்க வேண்டும். இணையதள நிர்வாகம் ஒரு சுலபமானதல்ல என்ற நிலை மாறவேண்டும்.

வரும் சந்ததியினர், இணைய தளத்தில் அனைத்து விபரங்களையும் தமிழிலேயே பெறுவது இன்னும் பத்து வருடங்களில் சாத்தியமாக வேண்டும்.