எங்களைப்பற்றி.

நாங்கள் தன்னாவளர்கள். கடந்த இருபது வருடங்களாக கணணி சம்பந்தமான பணியில் உள்ளோம். சரியாக சொல்லவேண்டும் என்றால் 1990 ஆம் வருடத்தில் இருந்து இந்திய அரசாங்க தொலை தொடர்பு துறையில் கணணி மற்றும் தரவு-பரிமாற்றம் சம்பந்தமான பணியில் உள்ளோம். பல தொழில்நுட்ப விஷயங்களை கற்று, நிருவகித்து வருகிறோம். எனவே பல கேள்விகளுக்கு, தரமான பதில் அளிக்கமுடியும். உங்கள் தள நிர்வாகத்திற்கு மிகவும் ஆதரவாக இருப்போம்.

நாங்கள் அமெரிக்கா நிறுவனத்தின் "தள வழங்கி" ஒத்துழைப்புடன் இந்த சேவையை தொடங்கியுள்ளோம். இந்த சேவையை தொடங்கிய முதற்காரணம், தமிழில் பல இணையதளங்கள் அமையவேண்டும் என்பது. இரண்டாவதாக, நாங்கள் ஒரு அறக்கட்டளை தொடங்க உள்ளோம். முக்கியமாக, வசதி இல்லாதவர்கள் மேல் படிப்பு படிக்க உதவவும் மற்றும் தமிழ் மொழிப்பெயர்ப்பு சேவைகளை ஊக்குவிக்கவும் இந்த அறக்கட்டளை செயல்படும். அடிப்படையில் இதற்கு பணம் தேவைப்படுகிறது.

நீங்கள் கொடுக்கும் நன்கொடையை நாங்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம் என்றாலும்கூட, நன்கொடையாக பெறுவதில் எங்களுக்கு அதிக ஆர்வம் இல்லை. எனவே, நீங்கள் எங்களிடம் தளம் அமைப்பதைத்தான் பெருமையாக எண்ணுகிறோம். இதில் வரும் பணத்தில், அறக்கட்டளை வேலைகளை தொடங்க உள்ளோம். எங்களிடம் தளம் அமைப்பதால், நீங்கள் சொந்த லாபம் அடைவதுடன், பல நல்ல காரியங்களுக்கும் உதவுகிறீர்கள் என்பதை கருத்தில்கொண்டு, தமிழ் தளம் அமைக்க முன்வாருங்கள்.